சுமார் 70 வயது ஆன, நச்சு என்று அன்பில்லாமல் அழைக்கப்பட்ட, நச்சினார்க்கினியனை இன்று தேடி கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கிறான் ராமலிங்கம். அவனுக்கு வாத்யாராக இருந்தவர்.
ராம்லி தான் வளர்ந்து பெரிய பையன் ஆகிவிட்டோம் என்று விடலையாக உணர்ந்த ஊருக்கு 24 வருஷம் கழித்து வந்திருக்கிறான். ஊர் முழுதும் நிறைய மாற்றங்கள். அவனுடைய பள்ளியில் சில புது மூன்றடுக்கு கட்டிடங்களை தவிர வேறு பெரிய மாற்றம் எதுவும் இல்லாதது கொஞ்சம் ஆச்சரியமாகவே இருக்கிறது.
அவன் ஜெயந்திக்கு காதல் கடிதாசு கொடுக்க தேர்ந்தெடுத்த மூலையில் இருந்த இலவம் பஞ்சு மரம் பட்டுப்போன மாதிரி தெரிந்தாலும் கிழமாய் அங்கேயே நிற்கிறது. ராம்லி மனசுக்குள் 'பொன் வசந்தம்' பாட்டு கொஞ்ச நேரம் கேட்கிறது. மீளாத்துயர் தந்த காதல் காவியம் இல்லை அது. அவள் எங்கே இருப்பாள் என்று ஒரு நொடி ஆர்வ சபலமாக மட்டுமே ஒரு கேள்வி உதித்து உடனே கரைந்தும் போய் விட்டது. அந்த வெளிச்சுவற்றின் மேல், மூத்திர சின்னங்கள் மட்டும் இன்றும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. காற்றில் அது தெரிந்தது.
நச்சியை தேடும் படலம் இங்கேதான் ஆரம்பிக்க வேண்டும். உள்ளே ஒரு முள் நிரடிக்கொண்டேஇருக்கிறது. அதை எடுத்து வீசி விட வேண்டும்.
தலைமை ஆசிரியரின் பெரிய அறை அதே மூலையில்தான் இருக்கிறது. பக்கத்தில் அந்த ஆபீஸ் ரூமும். வேலையில் இருக்கிற பெண்களுக்கெல்லாம், அந்த பெயரே விநோதமாய் இருக்கிறது. அவர்கள் கேட்டதே இல்லை. ரொம்பவே கெஞ்சி தேடி, சங்கிலி தொடராக விசாரித்து யாரோ ஒரு முன்னாள் ஆசிரியரிடம் நச்சியின் விலாசத் தை வாங்கி விட்டான். செல்போன்கள் வாழ்க.
நச்சினார்கினியன் என்கிற பெயருக்கு என்னே ஒரு தனித்தன்மை. பெயர் அப்படி இருக்கலாம். ஆள் அப்படி இருக்க முடியுமா. அதவும் ஒரு அரசு பள்ளியின் வாத்தியாராக. பையன்கள் எவ்வளவு இனிமை மிச்சம் இருக்கிறது என்று அளந்து கொண்டே இருப்பார்களே.
நச்சினார்க்கு அவர் இனிமையின் எதிரி போலவே இருப்பார். வாயில் அகராதியில் இல்லாத பல வார்த்தைகள் எளிதாக புழங்கும்.
அன்று சினிமாவில் வரும் வகுப்புகள் எல்லாம் தமிழ் வகுப்புகளாகவே இருக்கும். கிச்சுகிச்சு மூட்ட முயற்சி செய்வார்கள். அந்த அசடு வழியும் காட்சிகள் எல்லாம் மூட்டிவிட்ட உத்வேகத்தில், பையன்கள் நசினார்கினியனின் கெட்ட கனாவாக மாறுவார்கள். 15 வயது பசங்களின் பொறுப்பற்ற அட்டகாசங்களின் முன்னாள் 48 வயது நச்சி தோற்றுக்கொண்டே இருப்பார்.
அன்று சினிமாவில் வரும் வகுப்புகள் எல்லாம் தமிழ் வகுப்புகளாகவே இருக்கும். கிச்சுகிச்சு மூட்ட முயற்சி செய்வார்கள். அந்த அசடு வழியும் காட்சிகள் எல்லாம் மூட்டிவிட்ட உத்வேகத்தில், பையன்கள் நசினார்கினியனின் கெட்ட கனாவாக மாறுவார்கள். 15 வயது பசங்களின் பொறுப்பற்ற அட்டகாசங்களின் முன்னாள் 48 வயது நச்சி தோற்றுக்கொண்டே இருப்பார்.
பல சில்மிஷங்கள் நச்சிக்காகவே உருவாகியவை. ஒரு பையன் திடீரென்று 'வவ்' என்று ஒரு நாய் சத்தம் போடுவான். அது யார் எழுப்பியது என்று நிச்சயமாக சொல்ல முடியாது. மாபியாவை போன்ற கட்டுப்பாட்டுடன் எல்லா பசங்களும் ஒருத்தரை ஒருத்தர் காட்டிகொடுக்காமல் அமுக்கமாய் இருப்பார்கள். ராம்லி அங்கே ஒரு தலைவனாக திகழ்வான்.
ஒரு நாள் நச்சுவை, ஜெயராஜ் தியேட்டரில் இருந்து வெளியே வரும்போது பார்த்ததாக கஜா சொல்லி விட்டான்.
ஜெயராஜ் தியேட்டர் இருக்கும் இடம் ஒரு துர்நாற்றம் பிடுங்கும் ஓடையின் கரை. உள்ளே ஓடும் படங்கள் அப்படி இருக்கிறதோ இல்லையோ, அவர்கள் ஒட்டும் போஸ்டர்கள், லித்தோவில் பல கிளுகிளுப்பு விதிகளை காட்டும் விதமாக இருக்கும். மூட்டை பூச்சி, கொசு, எலிகள் என்று பயங்கர விபரீதங்களை லட்சியம் செய்யாமல் சில பல ஆங்கில மலையாள படங்களில் ஏதாவது தோல் தெரியக்கூடும் என்று ஆவலோடு இருட்டில் உட்கார்ந்து விட்டு வரும் மக்கள் நிறையவே உண்டு.
ஜெயராஜ் தியேட்டர் இருக்கும் இடம் ஒரு துர்நாற்றம் பிடுங்கும் ஓடையின் கரை. உள்ளே ஓடும் படங்கள் அப்படி இருக்கிறதோ இல்லையோ, அவர்கள் ஒட்டும் போஸ்டர்கள், லித்தோவில் பல கிளுகிளுப்பு விதிகளை காட்டும் விதமாக இருக்கும். மூட்டை பூச்சி, கொசு, எலிகள் என்று பயங்கர விபரீதங்களை லட்சியம் செய்யாமல் சில பல ஆங்கில மலையாள படங்களில் ஏதாவது தோல் தெரியக்கூடும் என்று ஆவலோடு இருட்டில் உட்கார்ந்து விட்டு வரும் மக்கள் நிறையவே உண்டு.
" இதக்கேளு. நேத்து நான் மரப்பாலத்தில் இருந்து ஐஸ் வாங்கிட்டு வர்ரேன். நம்ம நச்சு, ஜெயராஜ் தியேட்டர் வாசலில் இருந்து ரோட கிராஸ் பண்ணுது. அப்படியே நின்னுட்டேன். அது என்ன பாக்கல, தலைய குனிஞ்சிகிட்டு சைக்கள மிறி மிறின்னு மிறிச்சு எவனும் பாத்தரக்கூடதுன்னு செம ஸ்பீடா எஸ்கேப் ஆய்டுச்சு."
விசாரணை கமிஷன் அமைக்கபட்டது. ராம்லி தலைமையில். குற்றம் சாட்டப்பட்டவர் அழைக்கப்படவில்லை. அவர் மீது புதிய குற்றசாட்டுகள் வித விதமாக புனையப்பட்ட்ன. பையன்கள், கிளுகிளுப்பு அடைந்தார்கள். அவர்கள் ராஜ்ஜியத்தில் கேலி சப்தங்களாக தண்டனைகள் வழங்கப்படும்.
நச்சி எப்படியோ ஒரு மிதி சாக்காக இருந்தார். மற்ற வாத்யார்களை பார்த்து பயந்த பசங்கள் எல்லாம் இவரை லட்சியமே செய்யவில்லை.
----------
சீறாபுராணம் வகுப்பு.
"பானுவின் கதிரால் இடருறும் காலம்" என்று ஆரம்பித்தார் நச்சி,
"நம்ப ஸ்கூல் இல்ல சார்" என்றான் ராம்லி.
" என்ன"
"பானு நம்ப ஸ்கூல் இல்லையே"
"டேய். பிச்சிபுடுவேன்"
"எதை சார்?எதுக்கு சார்?"
அதற்கு மேல் சின்ன பையன்களிடம் சண்டை போடுவது வாத்தியாருக்கு அழகல்ல. ஆனால், கோவம் எல்லை மீறுகிறது.
குச்சியை எடுத்து விளாசுகிறார் இனியன். ராம்லி அந்த குச்சியை பிடித்துகொள்கிறான். பலப்பரீட்சை.
நச்சி அதை இழுக்கிறார். ஒப்பற்ற ஒரு சண்டை. அவனுடைய விலகல் லாவகம் அவரை இன்னும் மலை ஏற்றுகிறது. வேகமாய் பிரம்பை வீசுகிறார்.
அவன் குதித்து ஒதுங்க முயலுகையில் தடுக்கி விழ ஏதோ ஒரு கோணத்தில் அவன் கண்ணுக்கு மிக அருகில் குச்சி சதையை குத்தி விடுகிறது. ரத்தம்.
ராம்லின் ஓலமான ஒரு குரல். மிரட்சியுடன் நச்சி பாய்ந்து அவனை பிடித்து, சரி செய்ய பார்கிறார்.
கண் தப்பியது. அப்பாடா!
---------
"ஒரு செய்யுளுக்கு அர்த்தம் கேட்டார். நான் தப்பா சொல்லிட்டேன் அதுக்கு என்ன அடிச்சாரு. நான் வலி தாங்காம குச்சிய பிடிச்சு தடுக்கப்பாத்தேன். அவர் புடுங்கி விளாசி விளாசி அடிச்சாறு"
பின்னே என்ன பானுவை பத்தியா சொல்ல முடியும்.
6 அடி 2 அங்குலம் அப்பா வெறி கொண்டார். தொட் தொட் என்று புல்லட் ஸ்கூல் உள்ளே வருகிறது. வெள்ளை வேஷ்டி. தூண் போன்ற தொடைகள். வேட்டியை மீறி வரி போட்ட முத்திரை உள்ளாடையில் அட்டகாசம் பிரகடனம்.
கர்ஜித்தார்.
"அறிவு கேட்ட ஜென்மமே, என் புள்ளயோட கண்ணே போய் இருக்குமேடா " என்று அவர் ஆரம்பித்த வசவு கூட்டத்தை கூட்டி விட்டது. வாத்யாரின் சட்டையை பிடித்து விட்டார். ராம்லிக்கு பக்கென்றது.
நச்சுவின் பார்வை மண்ணை விட்டு விலகவில்லை. ஓரு ஜடம் போல இருந்தார். அவருடைய துக்கம் அவரை உறைய வைத்திருந்தது.
மிகப்பெரிய சமாதான கூட்டம் கூடியது. அப்பாவை அமைதி செய்தது. நசினார்க்கினியனை வில்லனாகவே திட்டினார்கள். அவர் ஜடமாக நிற்பது என்கிற உத்தியை மாற்றவே இல்லை.
ராம்லி அதற்கு பின்னர் சில மாதங்களில் அப்பாவை ஒரு மாபெரும் மாரடைப்புக்கு பறி கொடுத்தான். குடும்பம் ஊர் மாறியது.
-----------
நச்சினார்கினியன் என்ற பெயரில் அந்த ஊரில் ஒரே ஒருத்தர், பெயர் பெற்று இருக்கத்தான் வாய்ப்பு. ஆனாலும் யாருக்கும் அவரை தெரியாது. என்னப்பா உலகம் இது. விலாசம் மட்டும் போதவில்லை.
ஏதோ ஒரு புது நகர். ஒரு புது தெரு. விடா முயற்சி பலன் அளித்தது.
இடம் தெரிந்து விட்டது. போனால், ஒரு சராசரி அழுக்கு வீடு. கதவு திறந்தே இருக்கிறது.
தலையை உள்ளே நீட்டினான் ராம்லி,
தலையை உள்ளே நீட்டினான் ராம்லி,
ஒரு பெருசு. நச்சியேதான். சட்டை இல்லாமல், ஒரு லுங்கி மட்டும். மடித்து கட்டி இருந்தார். வாயில் ஒரு பீடி.
"வணக்கம் ஐயா"
"ம்"
"ஐயா, நான் உங்க கிட்ட படிச்சேன். ராமலிங்கம்னு பேரு. 1989 "
"ஓ "
"அப்போ ரொம்ப சேட்டை பண்ணி இருக்கேன்"
"எல்லா பசங்களும் அப்படிதான்"
"நான் ரொம்ப மோசமா ..."
"ஓ"
"உங்களுக்கு ஞாபகம் இல்லையா"
"அட 35 வருஷம் எத்தன பசங்க படிச்சிருக்காங்க அதெல்லாம் ஞாபகம் வெச்சுக்க முடியுமா ..."
"நான் உங்களுக்கு ஒரு தடவ எங்க அப்பாகிட்ட ரொம்ப மோசமா திட்டு வாங்கி குடுத்துட்டேன். பொய் சொல்லி அவமானப்படுத்திட்டேன்"
"அது நெறைய ஆயிருக்கு..."
"நான் ரொம்ப வருத்தப்படறேன்"
"ஓ"
"மன்னிப்பு கேட்டுக்கறேன்"
"ம் ...சரி"
நச்சியிடம் ஒரு ஆர்வமும் இல்லை, பதட்டமும் இல்லை. 12ம் நம்பர் பஸ் எப்ப வரும் என்பது போல பேசினார்.
கொஞ்சம் நேரம் அமைதி. ரொம்ப அமைதி போல தோன்றியது.
நச்சி எதுவும் பேச ஆரம்பிக்க மாட்டார் போல.
'சரி ஐயா. நான் கிளம்பறேன்"
"சரி"
ராம்லி இறங்கி நடக்க ஆரம்பித்தான். கால் முன்னே செல்லவில்லை. பாரமாக இருந்தது.
அவருக்கு தெரிஞ்சதா, இல்லையா. சும்மா இப்படி ஒரு தெரியாத மாதிரி இருக்கிறாரா என்றெல்லாம் குழப்பங்களுடன் தரையை பார்த்து வெறித்து நின்றான்.
---
"தம்பீ" என்று கூப்பிட்டார் நச்சி. திரும்பினான். அட பேசறாரே!
"என்ன வேலை பண்றேன்னு சொன்னீங்க"
"வாத்யாரா இருக்கேன் சார்".
--